பிரதமர் தலைமையில் இன்று இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது மறைந்த கட்சி தலைவர்கள் மற்றும் இராணுவ வீரர்கள் நினைவுகூரப்பட்டதை தொடர்ந்து, எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி நடைபெறவுள்ள தொழிலாளர் தின கொண்டாட்டம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
கோவிட் தொற்று காரணமாக மே தின ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்காது சுகாதார வழிகாட்டல்களுக்கமைய மே தின பேரணிகளை மாத்திரம் நடத்துவது தொடர்பில் இதன்போது கட்சி தலைவர்களால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ, அமைச்சர்களான ஜீ.எல்.பீரிஸ், தினேஷ் குணவர்தன உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள்
பலரும் கலந்து கொண்டிருந்தனர்.






ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 32 நிமிடங்கள் முன்

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
