இலங்கைக்கு காத்திருக்கும் பெரும் சிக்கல்! மகிந்த விடுத்துள்ள எச்சரிக்கை
மத்திய கிழக்கில் நிலவும் இராணுவ நிலைமை காரணமாக கடல்வழிகள் தடைப்பட்டால், எதிர்காலத்தில் நாட்டில் பெரும் பிரச்சினை ஏற்படக்கூடும் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
எனவே அதனை சமாளிக்க அரசாங்கம் ஒரு வெற்றிகரமான திட்டத்தைத் தயாரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடல்வழிகள் தடை
நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோது சர்வதேச பதற்ற நிலைமை தொடர்ந்தால் என்ன நடக்கும் என்று பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது முன்னாள் ஜனாதிபதி இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

நாட்டில் பயங்கரவாதத்தை முடிவுக்குக்கொண்டுவருவதில் பெரும் பங்களிப்பைச் செய்த முன்னாள் புலனாய்வு அதிகாரி சுரேஷ் சாலேவின் கைது மிகவும் வருத்தமளிப்பதாகவும், அவருக்கு மரியாதை தான் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
"வெளிநாடுகளிலிருந்து எரிபொருள் மற்றும் பல விடயங்களைப் பெறுவதால், கடல்வழிகள் தடைசெய்யப்பட்டால், எதிர்காலத்தில் நாட்டில் ஒரு பெரிய பிரச்சினை எழக்கூடும். அதைச் சமாளிக்க அரசாங்கம் ஒரு வெற்றிகரமான திட்டத்தைத் தயாரிக்க வேண்டும்," என்று வலியுறுத்தியுள்ளார்.
விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan