பசில் நாடாளுமன்றம் வருவது தொடர்பில் பிரதமர் மஹிந்த வெளியிட்ட தகவல்
எந்தவொரு நபர்களின் அவசரத்திற்காகவும் பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றம் வர முடியாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பசிலை நாடாளுமன்றத்திற்கு வரவைப்பதற்கு எந்தவொரு அமைச்சரரோ, நாடாளுமன்ற உறுப்பினருக்கோ அவசியம் இருந்தாலும் அதற்காக நாள் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என பிரதமர் தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
சிலர் பசில் நாடாளுமன்றம் வரும் நாட்களை பெயரிடுகின்றனர். எனினும் இன்று அல்லது நாளை ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இராஜினா செய்த பின்னர் பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்தை பிரதிநித்துவம் செய்வது தொடர்பில் உத்தியோகபூர்வமாக கூற முடியும்.
இது தொடர்பில் பசில் ராஜபக்ஷவுடன் எதிர்வரும் நாட்களில் உத்தியோகபூர்வ கலந்துரையாடல் மேற்கொள்ளப்படும். அதன்பின்னரே நாடாளுமன்றம் வரும் திகதி தொடர்பில் தீர்மானம் எடுக்க முடியும்.
இது தொடர்பில் பசில் ராஜபக்ஷவின் நிலையான தீர்மானத்தை அவர் வெளிப்படுத்தும் வரை என்னால் தீர்மானங்களை வெளிப்படுத்த முடியாதென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri