நாமலின் வேகத்தை புகழ்ந்து பாராட்டிய மஹிந்த ராஜபக்ஷ
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் செயற்பாடுகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ச புகழ்ந்து பாராட்டியுள்ளார்.
அலரி மாளிகையில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கிராமிய மைதானங்களை புனரமைக்கும் விசேட திட்டமொன்று இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் போது உரையாற்றிய பிரதமர்.
“நாமல் ராஜபக்ச, ரகர் விளையாடும் போது ஓடியதனை விடவும் வேகமாக தற்பொழுது அமைச்சராக ஓடுகின்றார்.
பாடசாலைகளில் விளையாட்டு வீரனாக திகழ்ந்த காரணத்தினால் இந்த வேகம் இந்த சக்தி அமைச்சருக்கு கிடைத்துள்ளது என நான் கருதுகின்றேன்.
இந்த நாட்டின் அனைவரும் விளையாட்டுத்துறையை சாதகமாக பார்க்க வேண்டும் என நான் நினைக்கின்றேன்.” என பிரதமர் மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam