கூட்டணிக் கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்க்க பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலையீடு
அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்க்க பிரதமர் மகிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) தலையீடுகளை மேற்கொண்டு வருவதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் (Gotabaya Rajapaksa) கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம், பிரதமரின் தலையீட்டால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் எனவும் தகவல்கள் கூறுகின்றன.
யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் அரசுக்கு சொந்தமான பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் தீர்மானம் காரணமாக அரசாங்கத்திற்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையில் அரசியல் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன.
அரசாங்கத்திற்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோதலை தீர்க்க தலையீடு மேற்கொள்ளுமாறு பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரதமரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த கோரிக்கைக்கு அமையவே பிரதமர் பிரச்சினையில் தலையிட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதனிடையே நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினை மற்றும் பொருளாதார விடயங்கள் சம்பந்தமாக கலந்துரையாட அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் சந்திப்பை மாதந்தோறும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri