மகிந்தவின் பரிதாப நிலை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக அரசியல்வாதிகள் செல்வது கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஓய்வுபெற்ற ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே மகிந்த பெரும்பாலும் வசிக்கிறார்.
இந்த நாட்களில் அவர் ஓய்வாக நேரத்தை கழிப்பதாக தெரியவந்துள்ளது. அவரது முழங்கால் மற்றும் முதுகுவலி காரணமாக, மருத்துவர்கள் அதிக ஓய்வு எடுக்குமாறு பரிந்துரைத்துள்ளனர்.
மகிந்த ராஜபக்ச

எனினும் கடந்த காலங்களில் மகிந்த ராஜபக்சவை சந்திப்பதற்காக தினமும் பெருமளவிலான மக்கள் வந்து சென்றனர் ஆனால் தற்போது அவரைச் சந்திக்க வருபவர்கள் மிகக்குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், அவருக்கு வரும் அழைப்புகள் மிகக்குறைவு மற்றும் முக்கிய அரசியல் கூட்டங்கள் பொதுஜன பெரமுனவால் ஏற்பாடு செய்யப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
படப்பிடிப்பில் ஏற்பட்ட மூச்சுத்திணறல்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகர் நவீன் Cineulagam
ஏர் பிரான்ஸ் விமானம் தரையிறங்க அனுமதி மறுத்த அமெரிக்கா: ஒற்றை பயணியால் நடுவானில் உருவான பீதி News Lankasri