77 வயதில் காலடி எடுத்து வைக்கும் பிரதமர் மகிந்த
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பிறந்த நாள் இன்று. 1945 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் திகதி பிறந்த மகிந்த ராஜபக்சவுக்கு தற்போது 76 வயது பூர்த்தியாகியுள்ளது.
மகிந்த ராஜபக்சவின் பிறந்த தினமான இன்று அனுராதபுரத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சந்த ஹிரு சேய தாது கோபுரம் இன்று திறக்கப்படுகிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதனை திறந்து வைக்க உள்ளதுடன் பிரதமர் மகிந்த ராஜபக்ச அதில் கலந்துக்கொள்ள உள்ளார்.
டி.ஏ. ராஜபக்சவின் 6 புதல்வர்களில் ஒருவரான மகிந்த ராஜபக்சவுக்கு மூன்று சகோதரிகள்.
அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் தேர்தலில் பெலியத்தை தொகுதியில் போட்டியிட்டு, 1970 ஆம் ஆண்டு தனது 24 வயதில் இளம் நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்திற்கு தெரிவானார். 1977 ஆம் ஆண்டு சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்துக்கொண்டார்.
மகிந்த ராஜபக்ச, 1994 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அரசாங்கத்தில் பல அமைச்சு பதவிகளை வகித்துள்ளார்.
2001 ஆம் ஆண்டு சந்திரிக்காவின் அரசாங்கம், ஐக்கிய தேசியக் கட்சியிடம் தோல்வியடைந்ததை அடுத்து,2002 ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டார்.
இதனையடுத்து 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றது. இதன் பின்னர் 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மகிந்த ராஜபக்ச இலங்கையில் 13 வது பிரதமராக பதவியேற்றார்.
இதன் பின்னர் 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மகிந்த, 2010 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு, 2014 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார்.
2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சியின் உறுப்பினராக செயற்பட்டு வந்ததுடன் 2018 ஆம் ஆண்டு ஆண்டு பிரதமராக பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டார்.
அவரது அரசாங்கம் 52 நாட்கள் மாத்திரமே பதவியில் இருந்தது.
இதனையடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அவரது சகோதரர் கோட்டாபய ராஜபக்ச வெற்றிப்பெற்றதை தொடர்ந்து மகிந்த மீண்டும் பிரதமராக பதவியேற்றதுடன் தொடர்ந்தும் பிரதமராக பதவி வகித்து வருகிறார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

நிலாவை காப்பாற்ற சென்ற சோழன் அப்பாவிற்கு ஏற்பட்ட சோகம்.. அய்யனார் துணை அடுத்த வார பரபரப்பு புரொமோ Cineulagam
