பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஜய ஸ்ரீ மஹா போதியில் வழிபாட்டில் ஈடுபட்டார்
பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று (19) காலை அனுராதபுரம் வரலாற்று சிறப்புமிக்க ஜய ஸ்ரீ மஹா போதியில் வழிபாடு ஈடுபட்டுள்ளார் என பிரதம ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,
அடமஸ்தானாதிபதி கலாநிதி வணக்கத்திற்குரிய பல்லேகம சிறிநிவாச தேரரை சந்தித்து அவரிடம் நலன் விசாரித்த மஹிந்த ராஜபக்ச அதனை தொடர்ந்து வணக்கத்திற்குரிய தேரரிடம் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டதாகவும்,
குறித்த சந்தர்ப்பத்தில் பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ச மற்றும் காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன, வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் என அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.