ஐக்கிய தேசிய கட்சியின் யோசனையை ஆட்சேபித்த மகிந்த கட்சி
ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்தின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கான ஐக்கிய தேசியக்கட்சியின் (UNP) யோசனையை பொதுஜன பெரமுன (SLPP) ஆட்சேபித்துள்ளது.
இது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார முன்வைத்த யோசனையை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆட்சேபித்துள்ளார்.
இந்த நடவடிக்கையானது அடிப்படைக் கோட்பாடுகளை சீர்குலைப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் ஸ்திரத்தன்மை
எந்தவொரு ஜனநாயகத்திலும் தேர்தல்களை ஒத்திவைப்பது ஆரோக்கியமானது அல்ல. இதற்கு பதிலாக நாட்டின் ஸ்திரத்தன்மை மக்களின் விருப்பத்தின் மூலம் வர வேண்டும் என்றும் நாமல் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஜனாதிபதியின் பதவிக் காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு மேலும் நீடிக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார (Palitha Range Bandara) யோசனை ஒன்றை முன்வைத்திருந்தார்.
ஜனாதிபதியினதும் நாடாளுமன்றினதும் பதவிக் காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பதன் மூலம் நாட்டை பாதுகாக்க முடியும் என்பதுடன் அதுவே சரியான சந்தர்ப்பமாகும் என்று அவர் தெரிவித்திருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

புதிய வீட்டிற்கு செல்லும் வேல்ஸ் இளவரசர் வில்லியம், கேட் தம்பதி! அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா? News Lankasri
