மூன்று முன்னாள் ஜனாதிபதிகள் வாக்களிக்கவில்லை!
இன்றைய உள்ளூராட்சித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதிகள் மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் வாக்களிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளின் வருகைக்காக ஊடகவியலாளர்கள் காத்திருந்தபோது, மைத்திரிபால, கோட்டாபய மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோர் வாக்களிக்க வரவில்லை என்று அந்தந்த சாவடிகளில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சில செய்தியாளர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
வாக்களிப்பு
339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. நாடளாவிய ரீதியிலுள்ள 13,759 வாக்களிப்பு நிலையங்களில் வாக்கு பதிவுகள் இடம்பெற்றன.
வாக்களிப்பு நிறைவடைந்தவுடன், அந்ததந்த வாக்களிப்பு நிலையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் முன்னெடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.