தம்மை காப்பாற்றுமாறு இந்திய பிரதமரிடம் கோரும் மகிந்தவின் விசுவாசிகள்
தம்மை பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து செல்லுமாறு, இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம், மகிந்தவின் விசுவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரை உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில், தம்மையும் அவரது குடும்ப உறுப்பினர்களையும் பாதுகாப்பிற்காக இந்தியாவுக்கு அழைத்துச் செல்லுமாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க இந்திய பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவிடம் உதவி கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பில் தாம் திருப்தியடையவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலைமையினால் இன்னும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு இடங்களில் மறைந்திருப்பதாக திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
21வது திருத்தத்திற்கு ஆதரவளிக்காவிட்டால் கிராமத்திற்கு திரும்ப முடியாது என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்த கருத்தின் ஊடாக அவர் வன்முறைக்கு அழைத்திருப்பதாக தெரியவந்துள்ளதென முன்னாள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணி மீது குற்றச்சாட்டு
தான் அரசியலில் இருந்து ஒரு ரூபாய் கூட சம்பாதிக்கவில்லை எனவும் தான் உழைத்து சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தும் கப்புட்டு காக்கா என கூச்சலிடும் கும்பலினல் முற்றாக தீயிட்டு எரித்து நாசம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் தான் இன்று வீடற்றவனாக மாறியுள்ளதாகவும் விமலவீர திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல்கள் அனைத்தின் பின்னணியிலும் மக்கள் விடுதலை முன்னணி இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan
