கடும் மன வருத்தத்தில் மஹிந்த
அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து தான் மாத்திரமல்ல பிரதமரும் மனவருத்தமடைந்துள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “நான் மாத்திரமல்ல பிரதமரும் மனவருத்தமடைந்துள்ளார் என உங்களுக்கு தெரியவில்லையா?
பொதுஜன பெரமுன கட்சியின் ஆண்டு விழாவில் அவர் வெளியிட்ட கருத்துக்கள் மனசாட்சியுடன் பேசினார் என விளங்கவில்லையா?
இந்த பயணத்தில் உள்ள குறை நிறைகளை அவர் சுட்டிக்காட்டவில்லையா? பிரதமரால் சில விடயங்களை மட்டுமே கூற முடியும். கூற முடியாத விடயங்களும் இருக்கும்.
இன்னும் சவாலான 3 வருடங்கள் எங்களுக்கு உள்ளது. இந்த சவால்மிக்க 3 வருடங்களில் எங்களுக்கு இடையில் பரஸ்பர மோதல்களின்றி அனைவரும் ஒன்றாக பயணிக்க முடிந்தால் மட்டுமே இந்த சவாலை வெற்றிக்கொள்ள முடியும்.
பூமியதிர்ச்சி ஏற்படும் போது அடுத்த பக்கம் வங்கியில் வேலை செய்ய முயற்சித்தால் பூமியதிர்ச்சி குறித்து மாத்திரமின்றி வங்கி உடைவது குறித்தும் கூச்சலிடுவோம் அல்லவா. அது தான் தற்போது இங்குள்ள பிரச்சினை” என வீரவன்ச மேலும் தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri
