முன்னாள் பிரதமர் மகிந்தவின் கார்ல்டன் வீட்டுக்கு எதிரிலும் போராட்டம்
தங்காலையில் உள்ள முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் கார்ல்டன் வீட்டுக்கு எதிரில் தற்போது போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி மக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வீதி தடைகளை தாண்டி செல்லும் மக்கள்
பொலிஸார் வீதி தடைகளை ஏற்படுத்தி மக்கள் மகிந்தவின் இல்லம் அமைந்துள்ள பகுதிக்குள் செல்வதை தடுக்க முயற்சித்த போதிலும் மக்கள் அதனை தாண்டி முன்நோக்கி செல்ல முயற்சித்து வருகின்றனர்.
கண்டி ஜனாதிபதி மாளிகைக்கு எதிரிலும் போராட்டம்
இதனிடையே தற்போதைய அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு எதிரிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
கொழும்பில் தற்போது நடைபெற்று வரும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.