மைத்திரி சுதந்திரக்கட்சியின் ஜனநாயகத்தை அழித்துவிட்டார்! மஹிந்த அமரவீர குற்றச்சாட்டு
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன சுதந்திரக்கட்சியின் ஜனநாயகத்தை அழித்துவிட்டதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குற்றம்சாட்டியுள்ளார்.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் அங்குணகொலபெலஸ்ஸையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இந்த கருத்தை வௌியிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
நாட்டின் ஜனநாயகம் குறித்துப் பேசுவதற்கு முன்னர் கட்சியின் ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும்.ஆனால் துரதிஷ்டவசமாக இன்று சுதந்திரக்கட்சிக்குள் ஜனநாயகம் அழிக்கப்பட்டுவிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மீதான குற்றச்சாட்டு
இதற்கிடையே இன்று அநுராதபுர புனித வௌ்ளரசு மர வழிபாடுகளில் கலந்துக்கொள்ள வருகை தந்திருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
இதன் போது கட்சியின் யாப்பு திருத்தம் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், கட்சியின் ஜனநாயத்தை தான் அழித்துவிட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை மறுப்பதாக கருத்து வெளியிட்டுள்ளார்.