சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஹோல் ஒப் பேம் விருதுக்கு தெரிவானார் மஹேல
சர்வதேச கிரிக்கட் பேரவையினால் ஆண்டுதோறும் வழங்கப்படும் ஹோல் ஒப் பேம் விருதுக்கு இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜெயவர்தன தெரிவாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச கிரிக்கட் பேரவை, கிரிக்கட் விளையாட்டில் சாதனை புரியும் வீரர்களை கௌரவப்படுத்தும் முகமாக 2009 ஆம் ஆண்டு தொடக்கம் ஒவ்வொரு வருடமும் ஹோல் ஒப் பேம் விருதை வழங்கி வருகிறது.
அதனடிப்படையில் இந்த வருடம் இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜெயவர்தன, இங்கிலாந்து வீரர் ஜெனெட் பிரிட்டின், தென் ஆப்பிரிக்காவின் ஷோன் பொலொக் ஆகியோர் தெரிவாகி உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இலங்கையின் கிரிக்கட் அணியில் சாதித்த முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் மற்றும் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார சங்கக்கார ஆகியோர் ஏற்கனவே இந்த விருதைச் சொந்தமாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Bigg Boss: மேடையிலேயே வாந்தி எடுத்து மாஸ் காட்டிய விஜய் சேதுபதி! அடுக்கி வைத்துள்ள ரெட் கார்டு Manithan
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
வயது உண்மை தெரிந்ததும் சரவணன் எடுத்த அதிரடி முடிவு, கதறி புலம்பும் மயிலு... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam