நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம்
வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் - நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய தேர்த்திருவிழா, ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இன்று (09) இடம்பெற்றுள்ளது.
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த மாதம் 26ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
தொடர்ச்சியாக 15 நாள்கள் இடம்பெறும் திருவிழாவில் 14ஆம் திருவிழாவான இன்று ( 09) தேர்திருவிழா இடம்பெற்றது.
தேர் உலா காட்சி
இதன்போது, அதிகாலை சிறப்புப் பூஜைகள் முடிவடைந்த பின்னர் பக்தர்களின் அரோகரா கோசத்துடன் தேரில் ஏறி நாகபூசணி அம்மன் காட்சியளித்தார்.
நாகபூசணி அம்மன் ஆலய தேர் திருவிழா ஒவ்வொரு வருடமும் பிரம்மாண்டமாக இடம்பெறுவது வழக்கமான ஒன்றாகும்.
நயினை நாகபூசணி அம்மனைக் காண இலங்கையின் பல பகுதிகளில் இருந்தும் கடல் கடந்து பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அந்த வகையிலே இன்றும் இலங்கையின் பல பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனின் தேர் உலா காட்சியைக் காண திரண்டு வந்தனர்.
பக்தர்களின் அரோகரா கோசத்துடன் கண்களைக் கவரும் வகையில் அம்பாள் தேரில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். நயினை அம்மனின் தேர்த்திருவிழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.

செம்மணி குறித்து வெளிவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் உண்மைகள்! தகவலறிந்தவரை பின்தொடரும் புலனாய்வுப்பிரிவு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |












43 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் அனுஷ்கா.. காதலனை பற்றி முதல் முறையாக கூறிய நடிகை Cineulagam

சீனாவைப் புறக்கணிக்கும் இந்திய மின்னணு உற்பத்தியாளர்கள் - தாய்வான், தென்கொரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் News Lankasri

கடலுக்கு அடியில் மிகப்பெரிய ஜாக்பாட்டை கண்டுபிடித்த இந்தியாவின் நட்பு நாடு.., ஆனால் ஒரு சிக்கல் News Lankasri
