கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பொலிஸாரின் நடவடிக்கையால் பதற்றநிலை
மஹரகமவில் ஜன அரகல போராட்டக்காரர்கள் குழு துண்டுபிரசுரங்களை விநியோகிப்பதற்காக அமைத்திருந்த முகாமை பொலிஸார் அகற்ற முயன்றபோது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவுடன் அரசாங்கம் கையெழுத்திட்ட ஒப்பந்தங்கள் மற்றும் சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்திற்கு எதிராக குடிசையில் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
வாக்குவாதம்
மஹரகமவில் கையொப்ப துண்டுபிரசுரங்கள் விநியோகம் மற்றும் கையெழுத்து பிரசாரம் உள்ளடங்கலான போராட்டம் ஒன்றை ஜன அரகல போராட்டக்காரர்கள் குழு ஏற்பாடு செய்திருந்தது.
இதன்போது, நடைபாதையில் அமைக்கப்பட்டிருந்த முகாமை பாதசாரிகளுக்கு இடையூறாக இருப்பதால் அதை அகற்ற வேண்டும் என்று பொலிஸார் போராட்டக்காரர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அதேவேளை, பாதசாரிகளுக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி போராட்டக்காரர்களின் முகாமை பொலிஸார் அகற்றியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் தங்க மயில் தங்க அன்ன வாகன உற்சவம்




