மஹர சிறைச்சாலையில் உயிரிழந்த 11 கைதிகளின் உடலிலும் துப்பாக்கிச் சூடு
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தில் உயிரிழந்த 11 கைதிகளின் உடலிலும் துப்பாக்கிச் சூட்டு காயங்கள் காணப்படுவதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கைதிகளின் மரணம் தொடர்பில் இன்றைய தினம் வத்தளை நீதிமன்றிற்கு வழங்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வன்முறைச் சம்பவங்களில் 11 கைதிகள் கொல்லப்பட்டதுடன், 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்த பதினொரு கைதிகளில் எட்டு பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டிருந்தமை பரிசோதனைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
கொவிட் தொற்றினால் பாதிக்கப்படாத மூன்று கைதிகளை அரசாங்க செலவில் அடக்கம் செய்யுமாறு வத்தளை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 9