மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் வருடார்ந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி!
மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் 2025ம் ஆண்டுக்கான வருடார்ந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப்போட்டி சிறப்பாக நடைபெற்றது.
இல்லத்தின் தலைவரும் கிளிநொச்சி மாவட்ட செயலக திட்டமிடல் பதில் பணிப்பாளரும் மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளருமான சரவணபவன் மோகனபவன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் கலந்து கொண்டிருந்தார்.
சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண நன்னநடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்கள ஆணையாளர் சுஜீவா சிவதாஸ்,கரைச்சி கோட்டக்கல்விப்பணிப்பாளர்,சுப்பிரமணியம் தர்மரத்தினம் கௌரவ விருந்தினர்களாக கிளிநொச்சி மாவட்ட சிரேஸ்ட நன்னடத்தை உத்தியோகத்தர் தர்மதாஸகே ருபான்பிரசாந் தர்மதாஸ,மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மூத்த ஆலோசகர்(கனடா) ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், இந்த நிகழ்வில் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், இல்ல முகாமைத்துவ குழு உத்தியோகத்தர்கள் ,பெற்றோர்கள், பழையமாணவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.












கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் ரஜினியின் கூலி.. இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
