திருக்கேதீஸ்வர ஆலய மகா சிவராத்திரி தின முன்னேற்பாடு குறித்து ஆராய்வு (video)
மகா சிவராத்திரி தினத்தை பாடல் பெற்ற திருத்தலமான மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் எதிர்வரும் 18 ஆம் திகதி சிறப்பாக முன்னெடுக்கும் வகையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல் மன்னார் அரசாங்க அதிபர் ஏ. ஸ்டன்லி டிமல் தலைமையில் இன்று மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
முன் ஆயத்தங்கள்
குறித்த கலந்துரையாடலில் திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணி சபை செயலாளர் சிவசம்பு ராமகிருஷ்ணன் மற்றும் அதன் பிரதிநிதிகள், அரச தனியார் திணைக்களின் தலைவர்கள், பொலிஸ், இராணுவம் உயர் அதிகாரிகள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் உட்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
கடந்த காலங்களில் நோய் தொற்று காரணமாக சிவராத்திரி தினம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் யாத்திரிகர்கள் வருகை குறைக்கப்பட்டு பல சுகாதார கட்டுப்பாட்டுக்கு மத்தியில் சிவராத்திரி தினம் இடம்பெற்றது.

பல லட்சம் யாத்திரிகர்கள்
மன்னார் திருக்கேதீஸ்வர திருத்தலத்தில் சிவராத்திரி தினத்தில் பல லட்சம்
யாத்திரிகர்கள் வருகை தர உள்ள நிலையில் ஏற்பாடுகள் முன்னெடுப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது முன் ஆயத்த நடவடிக்கை தொடர்பிலும், சுகாதாரம்,
போக்குவரத்து, பாதுகாப்பு, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam