சர்வதேச மனித உரிமை தினத்தை நினைவுகூர அநுர தரப்பிற்கு தகுதியில்லை: மா. சக்திவேல் பகிரங்கம்

Anura Kumara Dissanayaka Sri Lanka Politician Government Of Sri Lanka Janatha Vimukthi Peramuna National People's Power - NPP
By Bavan Dec 10, 2024 06:55 PM GMT
Report

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஆட்சியாளர்கள் சர்வதேச மனித உரிமை தினத்தை நினைவு கூருவதற்கு தகுதி இல்லை என சமூக நீதிக்கான அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார். 

சர்வதேச உரிமைகள் தின நினைவு தினத்தையிட்டு இன்று (10) அவர் வெளியி்ட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

அந்த அறிக்கையில் அவர் மேலும் கூறுகையில்," இலங்கையில் சட்ட ரீதியில் மனித உரிமை மீறலுக்கும் அதனை செய்பவர்களுக்கு பாதுகாப்பளிக்கின்ற பயங்கரவாத தடை சட்டம் உருவாக்கப்பட்டு கடந்த 45 ஆண்டுகளாக ஆட்சியாளர்கள் பாதுகாத்து வருகின்றனர்.

பயங்கரவாத தடைசட்டம்

அதேவேளை, கடந்த காலத்தில் இப்போது ஆட்சி பீடம் ஏறிய ஜேவிபியும் இச்சட்டத்தால் பாதிக்கப்பட்டிருந்த போதும் அதற்கு எதிராக குரல் எழுப்பாமல் இருந்ததோடு அந்த சட்டத்தின் பாதுகாப்பில் ஆட்சி செய்யும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஆட்சியாளர்கள் சர்வதேச மனித உரிமை தினத்தை நினைவு கூருவதற்கு தகுதி இல்லை.

சர்வதேச மனித உரிமை தினத்தை நினைவுகூர அநுர தரப்பிற்கு தகுதியில்லை: மா. சக்திவேல் பகிரங்கம் | Mah Shakthivel Accusated Anura Government

இலங்கையில் சட்ட ரீதியில் மனித உரிமை மீறலுக்கும் அதனை செய்பவர்களுக்கு பாதுகாப்பளிக்கின்ற பயங்கரவாத தடை சட்டம் உருவாக்கப்பட்டு கடந்த 45 ஆண்டுகளாக ஆட்சியாளர்கள் பாதுகாத்து வருகின்றனர்.

அதேவேளை கடந்த காலத்தில் இப்போது ஆட்சி பீடம் ஏறிய ஜே.வி.பியும் இச்சட்டத்தால் பாதிக்கப்பட்டிருந்த போதும் அதற்கு எதிராக குரல் எழுப்பாமல் இருந்ததோடு அந்த சட்டத்தின் பாதுகாப்பில் ஆட்சி செய்யும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான ஆட்சியாளர்கள் சர்வதேச மனித உரிமை தினத்தை நினைவு கூருவதற்கு தகுதி இல்லை.

பயங்கரவாத தடை சட்டம், இதனை கடந்த 45 ஆண்டுகளாக ஆட்சியாளர்கள் பாதுகாத்து வருகின்ற சூழ்நிலையில் தேசிய மக்கள் சக்தியான மக்கள் விடுதலை முன்னணியும் இச்சட்டத்தால் கடந்த காலத்தில் பாதிக்கப்பட்டிருந்தாலும் இச்சட்டத்திற்கு எதிராக குரல் எழுப்பாமல் இருந்ததோடு தற்போது இதற்கு ஒத்த புதிய சட்டத்தை வரையும் வரை தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தின் பாதுகாப்பில் ஆட்சி செய்ய விரும்புவது மனித உரிமை மீறலாகும்.

யுத்த காலம் 

இச்சட்டத்தின் கரு தமிழர்கள் பயங்கரவாதிகள் ஆக்கப்பட்டார்கள், சிறைக்குள் தள்ளப்பட்டார்கள், தண்டனை காலத்துக்கும் அதிகமாக சிறைக்குள் நாட்களை கழித்துக் கொண்டிருக்கின்றனர். அரசியல் கைதிகளாக இவர்களை ஏற்றுக் கொள்வதும் அரசியல் தீர்மானம் எடுத்து அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதும் மக்கள் குரலாகவும்.

சர்வதேச மனித உரிமை தினத்தை நினைவுகூர அநுர தரப்பிற்கு தகுதியில்லை: மா. சக்திவேல் பகிரங்கம் | Mah Shakthivel Accusated Anura Government

மக்களின் வாழ்வுரிமை காக்க புறப்பட்டவர்களை பயங்கரவாதிகளாக்கி தொடர்ந்து சிறையில் அடைத்து வைத்திருப்பது அடிப்படை மனித உரிமை மீறல். அதேவேளை நடந்து முடிந்த யுத்த காலப்பகுதியில் நீதிக்காக குரல் எழுப்பியோர், அரசியல் செயற்பாட்டாகள், ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டனர், அச்சுறுத்தப்பட்டனர், தாக்கப்பட்டனர், காணாமலாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.

இவர்களுக்கான நீதி இன்றும் கிட்டவுமில்லை. நீதிவிசாரணையும் இல்லை. எதிர்பார்க்கும் நீதி கிட்டும் என்பது தொடர்பிலும் நம்பிக்கை இல்லை. இத்தகைய சூழ்நிலைக்குள் தள்ளுவதும் மனித உரிமை மீறல் என கருதுகின்றோம். யுத்த காலத்தில் மீறப்பட்ட மனித உரிமை மீறல்கள் உள்ளன. படையினரிடம் கையளிக்கப்பட்டு காணமலாக்கப்பட்டோர் ஆயிரமாயிரம் பேர் உள்ளனர்.

அதற்கு இன்றுவரை விசாரணை இல்லாதிருப்பது மட்டுமல்ல விசாரணை ஆணை குழுக்கள் என்று மக்களை ஏமாற்றி பாதிக்கப்பட்டவர்களை மன உளைச்சலுக்குள் தள்ளுவதும் மன உளைச்சலுக்குள் உள்ளாக்கப்பட்டு வேதனையில் இயற்கை மரணம் அடைந்தாலும் அம்மரணங்களை எல்லாம் யுத்தத்தோடு தொடர்புபட்ட கொலைகள் என்று கூற வேண்டும்.

மனித உரிமை மீறல்கள்

இத்தகைய மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து இருக்கையில் சர்வதேச மனித உரிமைகள் தினம் என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு வேதனைக்குரிய ஒரு கரும் நாளாகவே அடையாளப்படுத்தப்படுகின்றது.

சர்வதேச மனித உரிமை தினத்தை நினைவுகூர அநுர தரப்பிற்கு தகுதியில்லை: மா. சக்திவேல் பகிரங்கம் | Mah Shakthivel Accusated Anura Government

விசாரணைகள் நீண்ட காலமாக இழுத்துக் இழுத்தடிக்கப்படுவதும், குற்றவாளிகள் அடையாளப்படுத்தப்பட்டாலும் அரச தலையீட்டின் காரணமாக அவர்களுக்கு விடுதலை அளிப்பதும், சாட்சிகளை மறைப்பதும், குற்றவாளிகளாக அடையாளப்படுத்தப்பட்டோருக்கு உயர் பதவிகள் அளிப்பது நாட்டிலே கடந்த காலம் முழுவதும் நிலவியது. அது உரிமை மீறலுக்கு ஆர்ச் அங்கீகாரம் கொடுக்கும் இழிவான செயலாகும்.

நாட்டில் இதுவரை 20க்கும் அதிகமான சமூக புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கொழும்பு துறைமுக நகருக்கு அண்மையில் உயர் பாதுகாப்பு வளையத்திலும் சமூகப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவும் உயிர் வாழும் உரிமையை பறித்ததற்கு இன்னும் ஒரு சாட்சியாகும். எனவே, சர்வதேச மனித உரிமைகள் தினம் என்பது ஒரு கேலிக்கூத்தாக அமைவதை சமூக செயற்பாட்டார்கள் விரும்பவில்லை.

பாதிக்கப்பட்டோருக்கு நீதி என்பது உண்மையை கண்டுபிடிப்பதுமாகும். அது மட்டுமல்ல அதற்கு பின்னால் உள்ள அரசியல் வெளிகொண்டு வரப்பட்டு அரசியல் நீதியும், சமூக நீதியும் நிலை நிறுத்தப்படல் வேண்டும். அவ்வாறு நிறுத்தப்பட்டால் மட்டுமே சர்வதேச மனித உரிமை தினம் அர்த்தமுள்ளதாக அமையும். ஐ.நா மனித உரிமை பேரவை அதற்கான ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளில் ஈடுபடவேண்டும்" என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கலாநிதி பட்டத்தால் அநுர அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

கலாநிதி பட்டத்தால் அநுர அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

மகாவலி ஆற்றில் மிதந்து கொண்டிருந்த அடையாளம் தெரியாத நபரின் சடலம் மீட்பு

மகாவலி ஆற்றில் மிதந்து கொண்டிருந்த அடையாளம் தெரியாத நபரின் சடலம் மீட்பு

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW      


5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US