மட்டக்களப்பில் மாயமான 15 வயது சிறுவன்! பொலிஸார் தீவிர விசாரணை
மட்டக்களப்பு - சந்திவெளி பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் ஒருவர் வீட்டில் இருந்து நிலையில் கடந்த 28ம் திகதி காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறுவன் காணாமல்போயுள்ளதாக இன்று பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்திவெளி பத்தினி அம்மன் கோவில் வீதி ஜீவபுரத்தைச் சேர்ந்த 15 வயதுடைய அன்ரனி ஆனுராஸ் என்ற சிறுவன் சம்பவ தினமான கடந்த மாதம் 28ம் திகதி வீட்டில் இருந்த நிலையில் காணாமல்போயுள்ளார் எனவும், கையடக்க தொலைபேசி கவரினுள் வைத்திருந்த இரண்டாயிரம் ரூபா பணத்தை காணவில்லை எனவும், அவரை எங்கு தேடியும் காணவில்லை எனவும் அவரை கண்டுபிடித்து தருமாறு பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுவன் பற்றிய தகவல்கள் தெரிந்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் அறிவிக்குமாறு பொதுமக்களை பொலிஸார் கோரியுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




