சர்ச்சையில் சிக்கிய தேரர் தொடர்பில் வெளியான புதிய தகவல்(Video)
ஜப்பானில் கைது செய்யப்பட்ட மாகல்கந்தே சுதந்த தேரர் குறித்து மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜப்பானில் இளைஞர் ஒருவரை வன்புணர்வு செய்த குற்றச்சாட்டின் பேரில் சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
ஜப்பானில் உள்ள யஜிமாதா விகாரையில் இளைஞர் ஒருவரை அழைத்து தகாத உறவில் ஈடுபட முயற்சித்த போது , விகாரைக்கு வருகை தந்த சிலரிடம் கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.
பின்னர் அவர்கள் குறித்த தேரரை தாக்கி கடும் எதிர்ப்பை வெளிக்காட்டி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இலங்கையர்களிடம் கூறப்பட்ட பொய்
இந்த சம்பவம் தொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
இந்நிலையில் குறித்த தேரர் ஜப்பானில் விகாரைகள் மற்றும் புத்தர் சிலைகள் கட்டுவதாக பொய் கூறி ஜப்பானில் வசிக்கும் இலங்கையர்களிடம் பணம் வசூலித்து வந்துள்ள விடயம் தெரியவந்துள்ளது.
மேலும் இவர்,நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மீது முதலில் வழக்கு தொடர்ந்தார்.
தற்போது குறித்த தேரருடைய மோசமான செயலை வெளிப்படுத்தும் காணொளியை ரஞ்சன் ராமநாயக்க தன்னுடைய உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam
