பொதுமக்களின் காணிகளை விடுவிக்க கோரி ஆளுநரிடம் மகஜர் கையளிப்பு (photos)
வடக்கு கிழக்கு பெண்கள் அணி மற்றும் தேசிய கடற்றொழிலாளர்கள் ஒத்துழைப்பு இயக்கம் ஆகிய ஒன்றிணைந்து பொது மக்களின் காணிகளை விடுவிக்க கோரி வடமாகாண ஆளுநரிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளன.
தேசிய கடற்றொழிலாளர்கள் ஒத்துழைப்பு இயக்கத்தினர் மற்றும் தென்னிலங்கையை சேர்ந்தவர்கள் வட மாகாணத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண்கள் உள்ளிட்டோர் வருகை தந்து பேரணியாக சென்று மகஜரை கையளித்துள்ளனர்.
ஆளுநரிடம் கோரிக்கை
இதனையடுத்து தேசிய கடற்றொழிலாளர்கள் ஒத்துழைப்பு இயக்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளில் பிரகாரம் அதிகளவான மக்கள் காணிகளை இழந்து முகாம்களில் தங்கி இருக்கும் நிலையில் அவர்களின் காணிகளை உடனடியாக விடுவித்து அவர்களின் சொந்த நிலத்தில் குடியமர அனுமதிக்குமாறு ஆளுநரிடம் குறித்த மகஜரின் மூலமாக கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
மேலும், ஆளுநர் இல்லாத நிலையில் ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் ஒருவரிடம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.



மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri
