கைவிலங்குடன் நீதிமன்றம் அழைத்து செல்லப்பட்ட வெனிசுலா ஜனாதிபதி! வெளியான புகைப்படங்கள்
அமெரிக்க அதிகாரிகள் மதுரோவை நியூயார்க்கின் புரூக்ளினில் உள்ள பெருநகர தடுப்பு மையத்திலிருந்து மன்ஹாட்டனில் உள்ள கூட்டாட்சி நீதிமன்றத்திற்கு மாற்றியுள்ளனர்.
வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் மன்ஹாட்டன் நீதிமன்ற கட்டிடத்திற்கு வந்தடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சிறை உடைகளில் தோற்றம்
அங்கு அவர் மீதான குற்றச்சாட்டுகளின் முழுப் பட்டியல் பின்னர் தெரிவிக்கப்படும்.

வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும், மனைவியும் உலங்குவானூர்தியில் போதைப்பொருள் அமலாக்க நிர்வாக (DEA) முகவர்களால் அழைத்துச் செல்லப்படும் புகைபடங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
அவர்கள் சிறை உடைகளில் தோற்றமளிப்பது போல் தோன்றுகின்றது. மேலும், மதுரோ சற்று நொண்டி நடப்பது போல் தெரிகிறது.
Courtesy-BBC





