உயிரிழந்த பெண்ணின் வங்கிக்கணக்கில் இருந்து 40 கோடி ரூபா மோசடி - இலங்கையர்களுக்கு பிணை மறுப்பு
மும்பையில் உயிரிழந்த பெண் ஒருவரின் வங்கிக் கணக்கில் இருந்து போலி ஆவணங்களைத் தயாரித்து 40 கோடி ரூபாவை திருட முற்பட்ட இலங்கையர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பிணை வழங்க மறுத்துள்ளது.
மும்பை வங்கிக் கணக்கில் வைப்பு செய்யப்பட்டிருந்த 40 கோடி ரூபாயை விடுதலைப்புலிகள் அமைப்புக்காக, மோசடி செய்து எடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு சட்டபூர்வ பிணை வழங்க மறுத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போலியாக பெறப்பட்ட ஆவணங்கள்
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மும்பை கோட்டை கிளையில், சேமிப்புக் கணக்கில் ஹமிதா ஏ லால்ஜி என்பவர், 40 கோடி ரூபாய் பணத்தை வைப்பு செய்திருந்தார். எனினும் குறித்த பெண் இறந்து விட்டதால், அந்த வங்கிக் கணக்கு கையாளப்படாமல் இருந்து வந்தது.

இதை தெரிந்துகொண்ட ஐரோப்பாவில் வசிக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளர் உமா காந்தன் என்பவர், அத்தொகையை கையாடல் செய்ய முடிவு செய்தாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தப் பணத்தை கைப்பற்றுவதற்காக இலங்கை தமிழரான லட்சுமணன் மேரி ஃப்ரான்சிஸ்கா என்பவரை இந்தியாவிற்கு சென்று பான் கார்டு, ஆதார் அட்டை, கடவுச் சீட்டு போன்றவற்றைப் பெற்றுள்ளார்.
அவருடன் கென்னிஸ்டன் ஃபெர்னாடோ, பாஸ்கரன், ஜோன்சன் சாமுவேல், தர்மேந்திரன், மோகன் ஆகியோர் இணைந்து, ஹமிதாவின் பொது அதிகாரம் பெற்றதாக போலி ஆவணங்களை தயாரித்து, 40 கோடி ரூபாயை எடுக்க முயற்சித்தனர்.
ஆனால், போலி கடவுச் சீட்டு வழக்கில் லட்சுமணன் மேரி ஃப்ரான்சிஸ்கா உள்ளிட்ட ஆறு பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
90 நாட்கள் கால அவகாசம்
தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கில் 90 நாட்களில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால், அரசுத் தரப்பு அறிக்கையை ஏற்று, மேலும் 90 நாட்கள் கால அவகாசம் வழங்கி, செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையில், இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட நிலையில், நீதிமன்ற காவலை நீட்டித்து செங்கல்பட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும், சட்டபூர்வ பிணை வழங்க மறுத்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்தது.

தங்களுக்கு சட்டபூர்வ பிணை வழங்கக் கோரி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கென்னிஸ்டன் ஃபெர்னாடோ, பாஸ்கரன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வு, சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ அமைப்பினர், கடந்த மார்ச் 29ம் திகதி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இந்த நிலையில், சட்டபூர்வ பிணை வழங்க மறுத்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து கடந்த ஏப்ரல் மாதம் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி, மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 6 நாட்கள் முன்
பிக் பாஸ் டைட்டில் ஜெயித்த திவ்யாவுக்கு ரூ.50 லட்சம் மட்டுமின்றி மேலும் ஒரு பெரிய பரிசு! என்ன பாருங்க Cineulagam