க.பொ.த சாதாரணதர பரீட்சையில் வடக்கிலுள்ள 12 கல்வி வலயங்களில் மடு முதலிடம்
கடந்த 2020ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த சாதாரணதர பரீட்சையில் வட மாகாணத்தில் உள்ள 12 கல்வி வலயங்களில் மன்னார் மாவட்டத்தின் மடு கல்வி வலயம் முதலாவது இடத்தை பெற்றுள்ளது.
வட மாகாண ரீதியில் முதலாவது இடத்தையும், தேசிய ரீதியில் 35வது இடத்தையும் மடு கல்வி வலயம் பெற்றுள்ளது.
மடு வலயக்கல்வி பணிப்பாளராக கடமையாற்றிய முன்னாள் வலயக்கல்வி பணிப்பாளர் க.சத்தியபாலனின் (K.Sathiyapalan) முயற்சியினாலும், மடு கல்வி வலயத்தில் உள்ள ஆசிரியர்களின் அயராத முயற்சியினாலும், அர்ப்பணிப்பான சேவையினாலும் குறித்த சாதனை நிலை நாட்டப்பட்டுள்ளதாக சாதனையாளர்களின் பெற்றோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
மடு கல்வி வலயத்தில் உள்ள மாணவர்கள் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தமது கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
மாணவர்கள் உரிய போக்குவரத்து வசதி இல்லாமையினால் பாடசாலைக்கு உரிய நேரத்திற்கு செல்ல முடியாத நிலை, மேலதிக வகுப்புக்கு மாணவர்கள் செல்வதில் காணப்படும் இடர்கள் உள்ளிட்ட பல்வேறு இடர்களுக்கு முகம் கொடுத்த மடு கல்வி வலய மாணவர்கள் பாடசாலை கல்வியையும் பாடசாலை ஆசிரியர்களையும் மாத்திரமே நம்பி இருந்துள்ளனர்.
கடந்த வருடம் வடக்கு மாகாணத்தில் 5வது நிலையிலும் தேசிய ரீதியில் 73வது நிலையிலும் இவ்வலயம் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
பராசக்தி படத்திற்கு எதிராக மோசமான விமர்சனங்களை பரப்பும் நபர்கள்.. கொந்தளித்த பராசக்தி பட நடிகர் Cineulagam