Gen-Z போராட்டம் எதிரொலியால் தலைமறைவான வெளிநாடொன்றின் ஜனாதிபதி
கிழக்கு ஆபிரிக்கா நாடான மடகஸ்கரின் ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிழக்கு ஆபிரிக்கா நாடான மடகஸ்கரில் ஜனாதிபதி Andry Rajoelina தலைமையிலான ஆட்சிக்கு எதிராக Gen-Z போராட்டம் நடைபெற்று வருகின்றது.
போராட்டம் தீவிரம்
தண்ணீர், மின் பற்றாக்குறை காரணமாக தொடங்கிய போராட்டம் தற்போது தீவிரமடைந்துள்ளது.

இதனை தொடர்ந்து மடகாஸ்கர் இராணுவத்தின் 'CAPSAT பிரிவு' முழு இராணுவத்தையும் கைப்பற்றி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, Gen-Z போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள், வர்த்தக சங்கங்கள் என பலரும் ஆதரவு அளித்ததால் போராட்டங்களால் நாடு ஸ்தம்பிதமடைந்துள்ளது.
ஜனாதிபதி தலைமறைவு
16 ஆண்டுகளில், ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் தங்களை வளப்படுத்திக் கொள்வதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை, அதே நேரத்தில் மக்கள் ஏழைகளாகவே இருக்கிறார்கள் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில், Gen-Z போராட்டம் தீவிரம் அடைந்ததால் ஜனாதிபதி Andry Rajoelina நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆட்சி அதிகாரத்தை பலவந்தமாக கைப்பற்றும் முயற்சி நடந்து வருவதாக மடகாஸ்கர் அதிபர் குற்றம் சாட்டியிருந்த நிலையில், கடந்த சில தினங்களாக பொது இடங்களில் ஜனாதிபதி காணப்படாததால் அவர் நாட்டை விட்டு வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது.
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri
ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் விஜய்யின் ஜனநாயகன் குறித்த வந்த சூப்பர் அப்டேட்... என்ன தெரியுமா? Cineulagam
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri
புதன் வக்ர நிவர்த்தியால் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு தான்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan