கிழக்குப் பல்கலைக்கழகத்திற்குள் அத்துமீறி நுழைந்த பொலிஸார்! அச்சத்தில் மாணவர்கள் (Video)
கிழக்குப் பல்கலைக்கழகத்திற்குள் அத்துமீறி நுழைந்த பொலிஸார் பல்கலைக்கழக பொங்கு தமிழ்த்தூபி அருகில் இறந்த உறவுகளை நினைவு கூருவதற்கு கட்டப்பட்டிருந்த சிவப்பு,மஞ்சள் கொடிகளை பிடிங்கி மாணவர்களை அச்சுறுத்தியுள்ளனர்.
மேலும், பல்கலைக்கழக மாணவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்றும் மிரட்டியுள்ளனர்.
இதன்போது பாதணிகளுடன் சென்று புனிதமாக வழிபடும் நினைவுச்சின்னங்களையும் கழற்றிச் சென்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து பொலிஸாரின் காட்டுமிராண்டித்தனமான செயற்பாட்டினை மீறி கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களால் உயிர்தியாகம் செய்த உறவுகளை நினைவுகூரும் முகமாக தீபங்கள் ஏற்றி, ஆகாய தீ பந்த ஒளி அனுப்பப்பட்டு மாவீரர் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் மீதான அச்சுறுத்தல்களுக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் வன்மையான கண்டனங்களை தெரிவித்துள்ளது.
மேலும், இதுபோன்ற அச்சுறுத்தல் நிகழாத வண்ணம் தம்மை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.







சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
விஜய்யை நெஞ்சில் டாட்டூவாக குத்தியும் இப்படியா.. வேறு கட்சியில் இணைந்த தாடி பாலாஜி, விமர்சிக்கும் நெட்டிசன்கள் Cineulagam
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam