முல்லைத்தீவு மாவட்டத்தில் உணர்வெளிச்சியுடன் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள் (PHOTOS)
தமிழீழ விடுதலைப்போரில் தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களை நினைவேந்தும் மாவீரர் நாள் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பல்வேறு துயிலுமில்லங்களில் இன்றைய தினம்(27) இடம்பெற்றது.
படையினர் மற்றும் பொலிஸாரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் மக்கள் தமது பிள்ளைகளை, உறவினர்களை நினைவில் இருத்தி துயிலுமில்லங்களுக்கு சென்று தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அளம்பில் மாவீரர் துயிலுமில்லம்,முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லம்,கோடாலிக்கல்லு மாவீரர் துயிலுமில்லம்,முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலுமில்லம், இரணைப்பாலை மாவீரர் துயிலுமில்லம்,தேராவில் மாவீரர் துயிலுமில்லம்,வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லம்,தேவிபுரம் மாவீரர் துயிலுமில்லம்,இரட்டைவாய்க்கால் மாவீரர் துயிலுமில்லம்,ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம்,முல்லைத்தீவு நகர கடற்கரை ஆகிய பதினோரு துயிலுமில்லங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது.
ஒவ்வொரு துயிலும் இல்லங்களிலும் மிக நெருக்கமான மக்கள் கூட்டத்தால் நிறைந்து காணப்பட்டது. இதனைவிடவும் மக்கள் வீடுகளிலும்,வியாபார நிலையங்களிலும், ஆலயங்களிலும்,பொது இடங்களிலும் விளக்கேற்றி மாவீரரை நினைவேந்தியுள்ளனர்.









கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 2 மணி நேரம் முன்
லொட்டரியில் கொட்டிய $803 மில்லியன் அதிர்ஷ்ட மழை: புளோரிடாவை சேர்ந்த நபருக்கு கிடைத்த ஜாக்பாட் News Lankasri
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri