இன்றைய தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டிக்குமாறு சுமந்திரன் கோரிக்கை

13th amendment M A Sumanthiran R. Sampanthan Ranil Wickremesinghe Sri Lanka Politician
By Theepan Feb 04, 2023 04:35 AM GMT
Report

ஜனாதிபதி கொடுத்த வாக்குறுதியின் காலக்கெடு இன்றுடன் முடிவடைவதால் அனைத்து மக்களையும் இன்றைய தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். பலாலியில் நேற்று இடம்பெற்ற காணி விடுவிப்பு நிகழ்வில் கலந்து கொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

மேலும் கூறுகையில்,

பலாலி விமான நிலையத்தை சுற்றி இருக்கின்ற பகுதிகளில் தொடர்ச்சியாக இராணுவம் கையகப்படுத்திய காணிகளில் இருந்து 108 ஏக்கர் நிலப்பரப்பு பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டிக்குமாறு சுமந்திரன் கோரிக்கை | Ma Sumanthiran Talking About Black Day Of Sl

விடுவிப்பதாக உறுதி அளித்து இருந்த நிலங்கள்

இதில் 80 ஏக்கர் இராணுவத்தினாலும் 28 ஏக்கர் கடற்படையாலும் விடுவிக்கப்பட்டுள்ளது. கடற்படை 30 ஏக்கர் விடுவிப்பதாக இருந்தது.

ஆனால் அதில் இரண்டு ஏக்கரை தவிர்த்து 28 ஏக்கர் விடுவிப்பதாக சொல்லப்படுகிறது. அந்த இரண்டு ஏக்கரை இப்போது அளக்கின்றார்கள் என்றும் செய்தி வந்திருக்கின்றது.

இந்த விடுவிப்பானது இப்போது புதிய அரசாங்கம் வந்த பிறகு ஜனாதிபதியினால் செய்யப்படுகின்ற விடுவிப்பு அல்ல. இது சென்ற ஆட்சி காலத்தில் இதே ஜனாதிபதி பிரதமராக இருந்தபோது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினுடைய காலத்தில் விடுவிப்பதற்கென்று இராணுவம் இங்கே இருந்து அகன்ற நிலப்பரப்பு மட்டும் தான் இப்போது விடுவிக்கப்படுகிறது.

இன்றைய தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டிக்குமாறு சுமந்திரன் கோரிக்கை | Ma Sumanthiran Talking About Black Day Of Sl

அந்த வேளையில் இராணுவம் இப்படியான கடிதங்களை மக்களுக்கு வழங்கி இருந்தார்கள். 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் திகதியிடப்பட்ட கடிதம் மக்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

அந்த இடங்கள் தான் இப்போது மக்களிடத்தில் கையளிக்கப்படுகிறதே தவிர மேலதிகமாக புதிதாக எந்த நிலமும் விடுவிக்கப்படவில்லை. 2019ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை இது விடுவிக்கப்படாததற்கு என்ன காரணம் என்று எங்களுக்கு தெரியாது.

வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை

ஆனாலும் தான் பிரதமராக இருந்தபோது விடுவிப்பதாக உறுதி அளித்து இருந்த நிலங்களை இப்போது மக்களிடத்தில் கொடுப்பதற்கு ஜனாதிபதி முன் வந்திருக்கின்றார்.

மக்களுடைய நிலங்களை திரும்ப மக்களுக்கு கையளிப்போம் என்று சொன்ன ஜனாதிபதியின் வாக்குறுதி இன்னமும் நிறைவேற்றப்படாமல் தான் இருக்கிறது. நவம்பர் நடுப்பகுதியில் வவுனியாவில் வைத்து அந்த வாக்குறுதியை கொடுத்திருந்தார்.

இன்றைய தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டிக்குமாறு சுமந்திரன் கோரிக்கை | Ma Sumanthiran Talking About Black Day Of Sl

பின்னர் நவம்பர் 23ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அந்த வாக்குறுதியை கொடுத்தார் டிசம்பர் மாதம் 13ஆம் திகதி சர்வ காட்சிகள் கூட்டத்திலே அந்த வாக்குறுதியை கொடுத்தார். அந்த காலக்கெடு முடிவடைகிறது.

அதைக் குறித்த எந்த நடவடிக்கையும் நாங்கள் காண முடியாது இருக்கிறது. ஆகவே ஜனாதிபதி கொடுத்த வாக்குறுதி முற்று முழுதாக மீறப்பட்டிருக்கின்றது.

பேச்சுவார்த்தை

நாங்கள் அந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட ஆரம்பித்த போது பலர் எங்களுக்குச் சொன்ன விடயம் தெரிந்து கொண்டே ஏமாற்றுகிறார்கள், நீங்கள் ஏமாறுகின்றீர்கள் என்று நாங்கள் ஏமாறவில்லை.

நாங்கள் பேச்சுவார்த்தைக்கு போயிருக்காவிட்டால் நாங்கள் அந்த கூட்டங்களில் கலந்து கொண்டு இருக்காவிட்டால் இதை விடுவிக்காமல் விடுவதற்கும் தீர்வு கொடுக்காமல் விடுவதற்கும் எங்களை சாட்டாக சொல்லி இருப்பார்கள்.

இன்றைய தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டிக்குமாறு சுமந்திரன் கோரிக்கை | Ma Sumanthiran Talking About Black Day Of Sl

அப்படி எங்கள் மீது பழி போடாமல் இருப்பதற்காக நாங்கள் அனைத்து விடயங்களிலும் முழுமையாக ஈடுபட்டோம் எங்களுடைய முழு ஆதரவையும் அதற்கு கொடுத்தோம். ஆனால் எதுவும் நிறைவேறவில்லை.

ஆனபடியினால் தான் இன்று தமிழருக்கு கருப்பு நாள். தமிழர்களுக்கு மட்டுமல்ல இந்த நாட்டில் எந்த மக்களுக்கும் உண்மையாகவே சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதை வலியுறுத்தி கருப்பு நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது.

நாடு வங்குரோத்து

பொருளாதாரத்தில் நாடு வங்குரோத்து அடைந்திருக்கின்றது. ஆகவே இது ஒரு கருப்பு நாள்.

75 ஆண்டுகள் நீங்கள் சுயமாக ஆட்சி செய்யுங்கள் என்று எங்களுடைய கையிலே கொடுத்துச் சென்ற பிறகு நாட்டை வங்கரோத்து நிலைக்கு ஆட்சியாளர்கள் தள்ளி இருக்கின்றார்கள்.

ஆகவே 75 கடந்து விட்டோம் என்று எண்ணிக்கையிலே பூரிப்படைய முடியாது.

இன்றைய தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டிக்குமாறு சுமந்திரன் கோரிக்கை | Ma Sumanthiran Talking About Black Day Of Sl

தோற்றுப்போன நாடாக இனங்களுக்கு இடையே நல்லுறவை பேண முடியாத நாடாக பொருளாதாரத்தில் வங்குரோத்து அடைந்த நாடாகத்தான் நாளைக்கு 75வது சுதந்திர தினம் என்று ஜனாதிபதி பெருமளவு செலவு செய்து நாடு வங்குரோத்தாக இருக்கின்ற போது மிகப்பெரிய செலவீனத்தோடு ஒரு கொண்டாட்டத்தை கொழும்பு காலிமுகத்திடலில் நடத்துகின்றார்.

அதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக நாங்கள் கறுப்பு நாளாக அனுஷ்டிக்கிறோம். அனைத்து மக்களையும் இன்றைய தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US