முதலமைச்சர் ஸ்டாலினுடன் சாணக்கியன் - சுமந்திரன் எடுத்த செல்பியால் வெடித்தது புதிய சர்ச்சை
தமிழ்நாடு அரசாங்கத்தால் கடந்த 4 ஆண்டுகளாகக் கொண்டாடப்பட்டு வரும் 2025ஆம் ஆண்டுக்கான அயலக தமிழர் தின மாநாட்டுக் கொண்டாட்டங்கள் ஜனவரி 11, 12ஆம் திகதிகளில் சென்னை மாநகரத்தின் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றன.
இதன்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சாணக்கியன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் எடுத்துக் கொண்ட செல்பியானது பெரும் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.
தமிழ் மக்களது பிரதிநிதிகளாக அனுப்பியவர்கள் மக்களது பிரச்சினைகள் பற்றி எடுத்துக் கூறாது நாயகத்தன்மையில் அங்கு பத்தோடு பதினொன்றாக கலந்து செல்பி எடுத்துக் கொண்டதோடு, முகநூலில் சில பதிவுகளை இட்டதன் மூலமும் தமிழ் மக்களை இவர்கள் எவ்வளவு தூரம் முட்டாள்களாக நினைக்கிறார்கள் என்பது புலப்படுகிறது.
மேலும், இந்த நிகழ்வுக்கு அப்பாலுள்ள அரசியலை பார்க்கப் போனால் தமிழ் மக்கள் சீர்குலைவான சமூக - அரசியல் பரப்புக்குள் நிற்பது தெளிவாகத் தெரிகின்றது என அயலகத் தமிழர் மாநாட்டில் பங்குபற்றிய இலங்கையின் அரசியல் பத்தி எழுத்தாளர் ஐ. வி மகாசேனன் தெரிவித்துள்ளார்.
மேலும், அயலக தமிழர் தின நிகழ்வில் இடம்பெற்ற முக்கிய விடயங்களையும் ஈழத்தமிழ் அரசியல்வாதிகளின் ஒழுங்குபடுத்தப்படாத செயற்பாடுகள் தொடர்பான விடயங்களையும் ஊடறுப்பு நிகழ்ச்சி ஆராய்கின்றது...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் திருவிழா





ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri

பார்க்கிங் படத்திற்கு 3 தேசிய விருதுகள், ஜீ.வி.பிரகாஷ் சிறந்த இசையமைப்பாளர்.. விருது வென்றவர்கள் லிஸ்ட் Cineulagam
