இந்திய கடற்றொழிலாளர்கள் தொடர்பில் தமிழக முதல்வர் விடுத்துள்ள கோரிக்கை
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறிய குற்றச்சாட்டில் கைதான தமிழகத்தை சேர்ந்த கடற்றொழிலாளர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
கோரிக்கை
கைதான 11 இந்திய கடற்றொழிலாளர்களை விடுவிக்க கோரி இந்திய மத்திய அரசாங்கத்திடம் மு.க.ஸ்டாலின் கோரியுள்ளார்.
இது தொடர்பான கோரிக்கை அடங்கிய கடிதத்தை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுப்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நீதிமன்ற உத்தரவு
இலங்கை வடக்கு பருத்தித்துறை கடல் பகுதியில் எல்லையை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட 11 இந்திய கடற்றொழிலாளர்களை இலங்கையின் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 11 கடற்றொழிலாளர்களும் பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது, அவர்கள் 11 பேரையும் எதிர்வரும் 06.09.2024 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள அஜித்தின் குட் பேட் அக்லி.. எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam

Super Singer: தொகுப்பாளினி பிரியங்காவின் மானத்தை காப்பாற்றிய சிறுமி... பிரமிப்பில் நடுவர்கள் Manithan

அடேங்கப்பா முதல் நாளில் உலகம் முழுவதும் மாஸ் வசூல் வேட்டை செய்த அஜித்தின் குட் பேட் அக்லி... Cineulagam
