எல்லைத்தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட 11 இந்திய கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல்
எல்லையை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட 11 இந்திய கடற்றொழிலாளர்களை இலங்கையின் கடற்படையினர் நேற்றிரவு (23.08.2024) கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 11 கடற்றொழிலாளர்களும் பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது, அவர்கள் 11 பேரையும் எதிர்வரும் 06.09.2024 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
பலியான சம்பவங்கள்
இலங்கை வடக்கு பருத்தித்துறை கடல் பகுதியில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதன்போது, நாகப்பட்டிணத்தை சேர்ந்த 11 பேருடன், அவர்கள் பயணித்த விசை படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த சில மாதங்களாக தமிழக கடற்றொழிலாளர்கள் தொடர்ந்தும் இலங்கையின் கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றது.

அத்துடன், அண்மைக்காலத்தில் இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்யும் நடவடிக்கையின் போது, ஒரு இலங்கை கடற்படை உறுப்பினரும், இரண்டு இந்திய கடற்றொழிலாளர்களும் பலியான சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri