இலங்கை வரலாற்றில் முதன்முறையாக உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகியுள்ள நீதிபதி: எம்.ஏ.சுமந்திரன் (Video)
இன்றைக்கு நீதித்துறை விசேடமாக ஒரு சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது அது குறித்து நாங்கள் கவனம் எடுக்க வேண்டிய ஒரு நிலையிலே இருக்கிறோம் என நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
முதன்முதலாக எங்களது நாட்டின் சரித்திரத்திலே நீதிபதி ஒருவர் தன்னுடைய உயிர் பாதுகாப்புக்காக, அதிலும் தான் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் எழுந்திருக்கின்ற அச்சுறுத்தலின் காரணமாக பதவி விலக நேர்ந்துள்ளது.
யாழ்ப்பாணம் - சுதுமலையில் இன்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நீதித் துறைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
முதன்முதலாக எங்களது நாட்டின் சரித்திரத்திலே நீதிபதி ஒருவர் தன்னுடைய உயிர்
பாதுகாப்புக்காக, அதிலும் தான் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில்
எழுந்திருக்கின்ற அச்சுறுத்தலின் காரணமாக வெளியேறியுள்ளதாக இன்றைய பத்திரிகை
செய்திகள் சொல்கின்றன. இது நீதித் துறைக்கு ஏற்பட்டுள்ள ஒரு அச்சுறுத்தல்.
நாட்டில் உள்ள சுயாதீன நிறுவனங்களை பாதுகாக்கின்ற கடப்பாடு எங்கள் அனைவருக்கும் இருக்கிறது. அப்படியான மிகவும் முக்கியமான சுயாதீனமான நிறுவனமாக நீதித்துறையானது இருக்கிறது.
மூன்று விதமான செயற்பாடுகள்
நீதித் துறையை பாதுகாக்கின்ற போது நீதிபதிகளுக்கு அச்சுறுத்தல் செய்வதை நாங்கள் கண்டிக்க வேண்டும், தடுக்க வேண்டும். அதே வேளையிலே நீதித் துறைக்கு உள்ளேயே தவறுகள் இருந்தால் அதனை திருத்துகின்ற வகையிலே நாங்கள் செயற்பட்டுக்கொள்ள வேண்டும்.
நீதித் துறைக்கு அச்சுறுத்தல் ஏற்படுகின்ற போது மூன்று விதங்களிலே ஒரு விதமாக அவர்கள் செயற்படலாம். ஒன்று அந்த அச்சுறுத்தலை கணக்கெடுக்காது தாங்கள் செய்ய வேண்டியதை செய்து விடலாம்.
இரண்டாவது அப்படியான அச்சுறுத்தல் வந்தால் அவர்கள் பதவி விலகல் செய்து அதில் இருந்து விலகி விடுவார்கள்.
மூன்றாவதாக, நீதிபதிகள் அந்த அச்சுறுத்தலுக்கு உள்ளாகி, அதற்கு அடங்கி தங்களுடைய நடத்தையை அல்லது தீர்ப்பை மாற்றி மற்றவர்களுடைய கைப் பொம்மைகளாக மாறி இயங்குவது இவை அனைத்தும் தடுக்கப்பட வேண்டும்.
நீதித்துறையை பாதுகாப்பது என்பது அவர்கள் எது செய்தாலும் பாதுகாப்பது என்பது அல்ல. நீதிபதிகள் சுயாதீனமானதாக செயற்படுவதை நாங்கள் பாதுகாப்பது ஆகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
முன்னாள் சபாநாயகர் கருஜயசூரியவின் மொழிகள் மற்றும் சமூக அபிவிருத்தி பயிற்சி மத்திய நிலையத்தில் சிங்கள மொழி கற்கை நெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு மானிப்பாய் சுதுமலை பகுதியில் உள்ள தனியார் விடுதியொன்றில் இன்று 9.30 மணியறவில் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இதன்பொழுது வடமாகாணத்தின் சூரிய கற்கைகள் நிறுவகத்தின் இரண்டாம் மொழி கற்கைகள் நிலையங்களில் கல்வி கற்று சித்திர பெற்ற 300 மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது. மேலும் மாணவர்களினால் கலை நிகழ்வுகளும் நடாத்தப்பட்டது.
தொடர்ச்சியாக முன்னாள் சபாநாயகர் கரு ஜெய் சூரியாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு சூரிய கற்கைகள் நிறுவகத்தினால் கேக்வெட்டி கொண்டாடப்பட்டது.
இதன்பொழுது நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி
எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் சபாநாயகரும் சூரிய கற்கைகள் நிறுவகத்தின்
இயக்குனருமான கருஜெயசூரிய, முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா
மகேஸ்வரன்,நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், வடமாகாண
ஆளுநர் பி.எஸ் எம். சார்ள்ஸ்,அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன்,
ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலதிக விபரங்கள் - தீபன்










கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam
