கொழும்பு - வெள்ளவத்தை பகுதியில் தீப்பற்றி எரிந்த சொகுசு கார்!
கொழும்பு - வெள்ளவத்தை மாயா மாவத்தையில் சொகுசு கார் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
காரின் உரிமையாளர் காரிலிருந்து புகை வருவதைக் கண்டுள்ளார். இதனையடுத்து தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்த போதிலும் அது பலனளிக்கவில்லை.
ஒன்பது தீயணைப்பு வீரர்கள் அடங்கிய குழு, தீயணைப்பு படையின் மூன்று தீயணைப்பு இயந்திரங்களை கொண்டு காரில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
காரின் உரிமையாளர் கொழும்பு 8 பகுதியை சேர்ந்தவர் எனவும், இந்த தீ விபத்தில் எவ்வித உயிர் சேதங்களும் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
காரில் மின் கசிவு ஏற்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
