இறுதிக் கட்ட யுத்தத்தில் நடந்தது என்ன? சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல் - செய்திகளின் தொகுப்பு
சர்வதேச அரங்கில் இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள யுத்தக் குற்றச்சாட்டுக்களை அச்சமின்றி எதிர்கொள்வதற்கான திராணி கோட்டாபய - மஹிந்த அரசாங்கத்திற்கு இல்லை என எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர், பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று ஆற்றிய உரையில் இவ்வாறு தெரிவித்த அவர், இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தில் இராணுவத்தினர் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையில், முன்கள வீரர்களை விட பின்னால் இருந்த ஒரு சிலர் தவறுகளை இழைத்திருக்கலாம் எனக் கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவலுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,