சவேந்திர சில்வாவிற்கு எதிரான தடை! பிரிட்டன் அரசாங்கத்திடம் முக்கிய கோரிக்கை - செய்திகளின் தொகுப்பு (VIDEO)
இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவிற்கு (Shavendra Silva) எதிராக தடை விதிக்க ஆதரவளிக்குமாறு பிரிட்டன் அரசாங்கத்திடம் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் சாரா ஜோன்ஸ் (Sarah Jones) கோரிக்கை விடுத்துள்ளார்.
தன்னுடைய தொகுதியில் வசிக்கும் தமிழ் சமூகத்தினர் மத்தியில் இலங்கையில் இடம்பெற்ற போரின் வடுக்கள் இன்னமும் இருப்பதை உணர முடிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவை தடை செய்யுங்கள் என்ற வாசகத்துடனான பதாகையுடன் சாரா ஜோன்ஸ் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,



