ராஜபக்ச குடும்பத்துடனான தொடர்பு: உகண்டா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை - செய்திகளின் தொகுப்பு (Video)
இலங்கையின் ராஜபக்ச குடும்பத்தினரிடம் இருந்தோ அல்லது அந்த நாட்டின் அரசியல்வாதிகளிடம் இருந்தோ, முதலீடுகள் எதனையும் பெறவில்லை என்று உகண்டாவின் செரினிட்டி குழுமம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் செரினிட்டி குழுமம் நேற்று ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதன் நிறுவனர்கள், செயல்பாடுகள் மற்றும் வணிக விவரங்கள் குறித்து சமூக ஊடகங்களில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து இதில் குழுமம் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்தநிலையில் இலங்கையின் ராஜபக்ச குடும்பத்துடன் தமது நிறுவனத்தின் வணிக முயற்சியை இணைக்கும் கருத்துப்பகிர்வுகளை அடுத்து, இலங்கையின் பொது மக்களிடையே தவறான கருத்துக்கள் தோன்றியுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,