விடுதலைப் புலிகளால் சுற்றிவளைக்கப்பட்ட இந்தியப்படைத் தளபதி
விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனைக் குறி வைத்து இந்தியப் படையினர் வன்னியில் ஒரு பாரிய நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார்கள்.
ஒபரேஷன் செக்மேட் (Operation Checkmate) என்ற பெயரிலே அந்த நடவிடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அந்த முற்றுகையின் போது “தான் மயிரிழையில் நான் உயிர் தப்பியதாகவும் உண்மையிலேயே அது ஒரு அச்சம் தரும் நிகழ்வாக இருந்தததாவும்” கூறுகிறார் இந்தியப் படையின் இலங்கை நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருந்த லெஃப்டிணன்ட் ஜெனரல் ஏ.எஸ். கல்கட்.
மேலும் அவர் “நாங்கள் இருந்த பிரதேசத்தை விடுதலைப் புலிகள் சுற்றி வளைத்திருந்தார்கள். அடுத்த இரண்டு மணி நேரமும் அங்கு பாரிய சண்டை இடம்பெற்றது. பின்னர் படிப்படியாக நிலைமை எமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது." என தெரிவித்தார்.
இது தொடர்பிலான மேலதிக தகவல்களை உள்ளடக்கி வருகிறது உண்மையின் தரிசனம் காணொளி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |