விடுதலைப் புலிகளை ஒழித்த காலத்தில் சீனாவின் நகர்வை அம்பலப்படுத்தும் முக்கிய இராஜதந்திரி
இலங்கையுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை விரைவாக செய்யப்படுவதை சீனா விரும்புகிறது. அதனை அந்த நாடு ஊக்குவிக்கிறது. சீனாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை செய்வதன் மூலம், இலங்கையும் ஏற்றுமதிகளை கணிசமாக அதிகரிக்கலாம் என்று சீனாவுக்கான இலங்கை தூதுவர் கலாநிதி பாலித்த கோஹன தெரிவித்தார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நெருக்கடியான நேரத்தில் ஆதரவு
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
சீன பொருளாதார ஆராயமுன், இருதரப்பு அரசியல் உறவை பார்க்கவேண்டும். பொருளாதார உறவின் ஆழம் மற்றும் வீச்சு விரிவாக்கத்தை இறுதியில் தீர்மானிப்பது அரசியல் உறவேயாகும்.
சீனாவும் இலங்கையும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உள்ளார்ந்த வளமான நட்பை அனுபவித்து வந்தன. அண்மைய நெருக்கடியான காலங்களில் ஒன்றுக்கொன்று ஆதரவளித்தன.

1952 ஆம் ஆண்டு அரிசி – ரப்பர் உடன்படிக்கை முக்கியமானது. மேலும் ஐக்கிய நாடுகள் சபையில் சீனாவின் சட்டபூர்வமான இடத்தை பெறுவதற்கு இலங்கை குரல் கொடுத்தது.
ஒரே சீனா கொள்கைக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறோம். சீனாவின் தலைவர் மாசேதுங் காலமானதை அடுத்து இலங்கையில் 8 நாட்கள் துக்க தினங்கள் பிரகடனப்படுத்தப்பட்டன.
விடுதலைப் புலிகளை ஒழிக்க இலங்கை போராடியபோதும், ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு தண்டனை வழங்குவதற்காக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டபோதும் சீனா நிபந்தனையின்றி இலங்கையை ஆதரித்தது.
சீனா ஐ.நா. பாதுகாப்பு சபையில் உறுப்பினராக உள்ளதுடன் இலங்கையின் நம்பகமான நண்பராக இருந்துவருகிறது. சீனா இலங்கையுடன் வசதிக்காகவோ அல்லது தற்காலிகத் தேவையின் அடிப்படையிலோ நட்புகொள்ளவில்லை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது.
கோவிட் நெருக்கடியின்போது இலங்கைக்கு 26 மில்லியன் தடுப்பூசிகளை சீனா வழங்கியது. அதில் 3 மில்லியன்கள் இலவசமாக கிடைத்தன என குறிப்பிட்டுள்ளார்.
விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
தமிழக சட்டமன்ற தேர்தல்! பல மணி நேரமாகியும் வாக்களிக்க வராத மக்கள்! பரபரப்புக்கு மத்தியில் முதல் வாக்கை பதிவு செய்த பெண்
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri