விடுதலைப் புலிகள் எந்தவொரு போர் குற்றங்களிலும் ஈடுபடவில்லை! - கஜேந்திரகுமார்

Tamil National Alliance Gajendrakumar Ponnambalam War crime Vinayagamoorthy Muralitharan
By Murali Sep 15, 2021 07:46 PM GMT
Report

 தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு எந்தவொரு போர் குற்றங்களிலும் ஈடுபடவில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இன்று இடம்பெறும் சகல தமிழ் விரோத செயற்பாடுகளுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பே காரணம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“ தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை, அதனை நிருபிக்கலாம் என்பதையே தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வருகின்றோம். உண்மையான தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் எந்தவொரு போர் குற்றங்களிலும் ஈடுபடவில்லை.

ஒரு முழுமையான விசாரணை நடத்தினால் அதற்கு முகங்கொடுத்து அந்த இயக்கத்தின் நற்பெயரை உறுதிப்படுத்தலாம் என்பதையும் தமிழ் இனத்தின் நற்பெயரை உறுதிப்படுத்தலாம் என்பதையுமே தொடர்ச்சியாக உறுதிப்படுத்தி வருகின்றோம்.

இவ்வாறு விசாரணை ஒன்று நடந்தால், உண்மையும் அதன் பின்னையும் வெளிப்பட்டால் எமது நியாயங்கள் உறுதிப்படுத்தப்படும். அதனையே நாம் கூறுகின்றோம்.

அத்துடன் இயக்கம் என கூறிய நபர்களை அரசாங்கம் கொலைசெய்துவிட்டது, இப்போது எங்கே சென்று அவர்களை விசாரிப்பது, இன்று விசாரிக்கப்பட வேண்டியவர்கள் பிள்ளையான், கருணா, டக்ளஸ் தேவானந்தா, சித்தார்த்தன் போன்றவர்களையே விசாரிக்க வேண்டும்.

ஆகவே விசாரணை ஒன்று நடந்தால் புலிகளின் நற்பெயர் உறுதிப்படுத்தப்படும். இயக்கம் தவறிழைத்தது என்பது சுமந்திரன் மற்றும் அவர் சார்ந்த கட்சியின் நிலைப்பாடாகும்.

மேலும் பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும், அதுமட்டும் அல்ல பயங்கரவாத தடை சட்டம் ஒன்று எந்தவொரு சட்டமும் புதிதாக கொண்டுவரவும் கூடாது என்பதே எமது நிலைப்பாடாகும்.

இதனிடையே, இன்று இடம்பெறும் சகல தமிழ் விரோத செயற்பாடுகளுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பே காரணமாகும்.

மனித உரிமைகள் பேரவையில் கூட உள்ளக பொறிமுறையை வலியுறுத்தியுள்ள நிலையில் அதனை வரவேற்று உலகத்திற்கு சொன்னது மட்டுமல்லாது எமது மக்கள் மத்தியில் பொய்யை திணிக்க நடவடிக்கை எடுக்கின்றனர்.

மக்கள் தொடர்ந்தும் ஏமாறக்கூடாது என்பதற்காகவே மக்களுக்கு உண்மைகளை வெளிப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றோம்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US