விடுதலைப்புலிகளின் தலைவர் இல்லை! மூத்த தலைவர் தயாமோகன் பரபரப்பு தகவல் (Video)
விடுதலைப் புலிகளின் தலைவர் கடந்த 2009, மே மாதம் 17ஆம் திகதி வீரச்சாவை தழுவிக்கொண்டதாக விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளரும், தற்போது புலம்பெயர் நாடொன்றில் வாழ்பவருமான தயாமோகன் தெரிவித்துள்ளார்.
கடந்த (17.05.2023) ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை மையப்படுத்தி அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
14 ஆண்டுகளுக்கு பின்னர் இவ்வாறு தெரிவித்துள்ள அவர் மே 17ஆம் திகதி தான் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் எனவும் கூறியுள்ளார்.
அத்தோடு விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையின் பொறுப்பாளர் பொட்டு அம்மானும் இறுதிப்போரில் வீரச்சாவடைந்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்த முழுமையான தகவல்களை இக்காணொளியில் காணலாம்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW |




