விடுதலைப்புலிகளின் தலைவர் மே 15 வரை களத்தில் இருந்தார்! ஆனால் உயிரோடு இல்லை - குழப்பும் முன்னாள் போராளிகள்

Sri Lanka India
By Dhayani Feb 16, 2023 01:49 AM GMT
Report

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி வரை களத்தில் போராடினார். இருப்பினும் உயிரோடு இல்லை. இலங்கை அரசு காட்டியது பிரபாகரனின் உடலும் இல்லை என விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் சிலர் குழப்பமான கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன், நலமுடன் இருப்பதாகவும், உரிய நேரத்தில் மக்கள் முன் வருவார் என உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் நேற்றுமுன் தினம் செய்தியாளர்களை சந்தித்து அறிவித்திருந்தார்.

பழ.நெடுமாறன் தெரிவித்த இந்த கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், பிரபாகரன் உயிருடன் இல்லை என்று இலங்கை இராணுவம் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில், பழ.நெடுமாறனின் இந்த அறிவிப்பு தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளதுடன், அரசியல்வாதிகள், முன்னாள் போராளிகள், அரசியல் ஆய்வாளர்கள் என பலரும் தமது மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். 

விடுதலைப்புலிகளின் தலைவர் மே 15 வரை களத்தில் இருந்தார்! ஆனால் உயிரோடு இல்லை - குழப்பும் முன்னாள் போராளிகள் | Ltte Leader Prabhakaran Is Alive Row Fighters

மே 15 வரை களத்தில் இருந்தார்!

அந்த வகையில் முன்னாள் போராளிகள் சிலர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் பின்வருமாறு,

இலங்கையில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் இறுதி யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் ஆயுதங்களைக் கைவிட்டு மவுனித்துக் கொண்டது. அப்போது விடுதலைப்புலிகள் தலைவர் கொல்லப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டு அவருடைய உடல் என சடலம் காட்டப்பட்டது.

ஆனால் 2009 ஆம் ஆண்டு முதல் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் தலைவர் மே 15 வரை களத்தில் இருந்தார்! ஆனால் உயிரோடு இல்லை - குழப்பும் முன்னாள் போராளிகள் | Ltte Leader Prabhakaran Is Alive Row Fighters

மகன்களை விட்டு தப்பிச்சென்றிருப்பாரா?

யுத்தத்தில் மகன்களான சார்லஸ், பாலச்சந்திரன் உள்ளிட்டோரை பலி கொடுத்துவிட்டு அவர் மாத்திரம் தப்பிச்சென்றிருப்பாரா என விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

மேலும், திடீரென பழ.நெடுமாறன் இந்த அறிவிப்பை வெளியிடக்காரணம் என்ன என்பது தொடர்பிலும் பல்வேறு சந்தேகங்கள் நிலவியுள்ளன.

இருப்பினும், பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர்களாக இருந்த சில போராளிகள் ஊடகங்களில் பல தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.

விடுதலைப்புலிகளின் தலைவர் மே 15 வரை களத்தில் இருந்தார்! ஆனால் உயிரோடு இல்லை - குழப்பும் முன்னாள் போராளிகள் | Ltte Leader Prabhakaran Is Alive Row Fighters

உயிருடன் இருக்க வாய்ப்பில்லை

2009 ஆம் ஆண்டு மே 15 ஆம் திகதி வரை பிரபாகரன் களத்தில் இருந்தார் எனவும், கடைசியாக நந்திக்கடல் பகுதிக்கு சென்ற நிலையில் இருபக்கம் நிலப்பரப்பு மற்றொரு பக்கம் நந்திக் கடல். இன்னொரு பக்கம் கடற்பரப்பு. அதன் பின்னர் அவருக்கு என்ன நடந்தது என தெரியாது. பிரபாகரன் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் இலங்கை இராணுவம் காட்டியது பிரபாகரனுடைய உடல் அல்ல என்றும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் இறுதி நாட்களில் பிரபாகரன், பாதுகாவலர்கள் உட்பட யாருடனும் தொடர்பில் இல்லாமல் இருந்ததாகவும், அதன் காரணமாக அவருக்கு என்ன நடந்தது என்பது யாருக்குமே தெரியாது எனவும், அவர் உயிருடன் இருந்து அவரே இதனை அறிவிக்கும் வரை உண்மை செய்தி கிடைக்கப்பெறாது எனவும் முன்னாள் போராளிகள் சிலருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 5 Evening

2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
மரண அறிவித்தல்

ராஜமுந்திரி, India, சென்னை, India

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
நன்றி நவிலல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US