விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பான அறிவிப்பின் பின்னணியில் யார்..! திருமாவளவனின் தகவல்
பா.ஜ.க அரசாங்கம் ஈழத்தமிழர் பிரச்சினையில் வேறு நோக்கத்தோடு, சிங்கள அரசாங்கத்தை அச்சுறுத்தும் நோக்கோடு தலையிடுவதாக தெரிகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன், நலமாக இருப்பதாக அண்மையில் பழ நெடுமாறன் செய்தியாளர் சந்திப்பொன்றில் வைத்து குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்திய அரசாங்கம் அல்லது இந்திய அரசாங்கத்தின் உளவுத்துறை இந்த அறிவிப்பின் பின்னணியில் இருந்து செயற்படுகிறது என்று எண்ணத் தோன்றுகிறது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அட அஜித்தின் சிட்டிசன் பட நடிகை வசுந்தராவா இது?... அடையாளமே தெரியாமல் மாறிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோ Cineulagam
சோழனை கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்திய நிலா.. காதல் மலர்ந்ததா? அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam