தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரது மரணத்திற்கு முன்னர் ஏற்றுக்கொண்ட சவால்! பிள்ளையான் வெளிப்படுத்திய விடயம்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மரணிப்பதற்கு முன்னர் நாங்கள் மிகப் பெரிய சவாலை ஏற்று கிழக்கு மாகாண சபையைப் பொறுப்பேற்றோம். அதனூடாக முடிந்தவரையில் இலக்குகளை அடைவதற்கு முயற்சி எடுத்தோம் என கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இலங்கை அரசியல் வரலாற்றில் தாங்கள் நினைப்பதை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வடக்கு அரசியல் தலைவர்கள் நினைக்கிறார்கள். அரசியல் முடிவுகள் அனைத்தும் யாழ் மண்ணிலிருக்கின்ற சில தலைவர்களால் எடுக்கப்பட்ட முடிவுகள்தான்.
தமிழ் காங்கிரஸ், தனித் தமிழ் பிரகடனம், ஏனைய இயக்கங்கள், போன்றனவெல்லாம் நாங்கள் மட்டும்தான் என்கின்ற திமிர் பிடித்த அதிகார வர்க்கத்தினுடைய பிடியிலேயே இருந்திருக்கின்றது.
கிழக்கின் தலைவிதியை நாங்களே தீர்மானித்துக் கொள்வோம்
அவை சாதாரணமான மக்களுக்கு வெற்றிகரமான திட்டங்களைப் பெற்றுக் கொடுக்கவில்லை. முரண்பாடுகளையும், வலிகளையும்தான் ஏற்படுத்தியிருந்தது.
விசேடமாக 1976 இற்குப் பின்னர் சகோதரப் படுகொலையாக எமது இனத்தையே அழித்துச் சென்றிருக்கின்றது. அதன் கடைசி அழிவுதான் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்ட அழிவாகும். அதன் பின்னர்தான் எமது த.ம.வி.பு கட்சி கிழக்கில் உருவானது.
கிழக்கு, கிழக்காக இருக்க வேண்டும் என்பது எமது கொள்கை. கிழக்கின் தலைவிதியை நாங்களே தீர்மானித்துக் கொள்வோம்.
வடக்கிலே இருந்து வந்து யாரும் இங்கு வந்து ஆதிக்கம் செலுத்த முடியாது உங்களுக்கிருக்கின்ற பிரச்சனைகளை நீங்களே பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். முடிந்தால் கிழக்கு மாகாணத்துக்கு பங்களிப்புக்களைச் செய்யுங்கள். வடக்கின் அரசியலை கிழக்கில் திணிக்க வேண்டாம்.
கிழக்கு மூன்று இனமக்களும், இணைந்து வாழுகின்ற மாகாணமாகும். எனவே கல்வி, பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டுமானால் தனியான அதிகாரப் பகிர்வின் தேவையையும் நாங்கள் உணர்ந்திருக்கின்றோம்.
பிரபாகரன் மரணிப்பதற்கு முன்னர் நாங்கள் மிகப் பெரிய சவாலை ஏற்று கிழக்கு மாகாண சபையைப் பொறுப்பேற்றோம். அதனூடாக முடிந்தவரையில் இலக்குகளை அடைவதற்கு முயற்சி எடுத்தோம்.
அதில் எதிர்பார்த்த வெற்றியை அடையா விட்டாலும் ஓரளவு வெற்றியடைந்துள்ளோம். எமது கட்சி கிழக்கில் ஒரு தீர்மானம் எடுக்கும் கட்சியாக வளர்ந்து நிற்கும் என குறிப்பிட்டுள்ளார்.

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
