விடுதலைப் புலிகளின் தலைவருக்கு இலங்கையில் அரைவாசி! முதலை கதை கூறியவருக்கு சிறீதரனின் பதிலடி (Video)
இறுதி யுத்தத்தில் காணாமல் போன மற்றும் உயிரிழந்தவர்களுக்கு நீங்கள் காசால் விலை பேசுகிறீர்களே தவிர அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்தவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
முதலைகளுக்கு கூட மனிதர்களை வெட்டிப் போட்ட சம்பவங்கள் இந்த நாட்டில் தான் நடந்திருக்கின்றன.
அந்த விடயத்தை வெளிப்படுத்தியவர் அண்மையில் இந்த சபையில் பேசும் போது கூறியிருந்தார், “இந்த நாட்டின் அரைவாசியை பிரபாகரனிடம் கொடுத்திருந்தால் இந்த நாடு என்ன கதியாகியிருக்கும்” என இஸ்ரேல் காசா பிரச்சினையை ஒப்பிட்டு அவர் பேசியிருந்ததையும் நான் பார்த்தேன்.
ஆகவே இந்த நாட்டில் இருப்பவர்கள் என்ன மன நிலையோடு இருக்கின்றார்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், நல்லிணக்கத்தின் கதவுகளை இறுகப் பூட்டி சீல் வைத்து விட்டு, இன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பணம் வழங்குகின்றேன் என்றால், இது கண்ணை மூடிக்கொண்டு பூனை பால் குடிப்பது போன்று உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



