வேலணையில் கைக்குண்டு மீட்பு (Photos)
ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேலணை, அம்பிகா நகர் பகுதியில் இருந்து விடுதலைப் புலிகளின் கைக்குண்டு ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளது.
தனியார் ஒருவருக்கு சொந்தமான காணி ஒன்றில், பகுதியளவில் மண்ணில் புதைந்திருந்த இந்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.
குறித்த காணியின் உரிமையாளர் வெளிநாட்டில் வசிப்பதாக தெரியவந்துள்ளது.
குறித்த கைக்குண்டினை அவதானித்த பிரதேசவாசிகள் இராணுவத்தினருக்கு இது தொடர்பாக தகவல் வழங்கியுள்ளனர்.
வழங்கிய தகவலின் அடிப்படையில் கைக்குண்டினை மீட்ட இராணுவத்தினர் அதனை பலாலி இராணுவ முகாமிற்கு எடுத்துச் செல்லவுள்ளார்கள்.
அந்த கைக்குண்டில் " கொல்பவன் வெல்வான், எதிரியின் பக்கம், தயாரிப்பு தமிழீழம்" என்ற வசனங்கள் பொறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam