தமிழர்களின் கலை வரலாற்றில் விடுதலைப்புலிகளின் காலம் பொற்காலம் - சிறீதரன் (Photos)
தமிழர்களின் கலை வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலம் பொற்காலம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (Sivagnanam Sreedharan) தெரிவித்துள்ளார்.
கலாலயத்தின் வெளியீடான விழுதொலிகள் இறுவட்டினை வெளியிட்டு வைத்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
போர் முடிந்ததன் பின்னரான காலப்பகுதியில் கலைஞர்கள் தங்களின் படைப்புக்களுக்கு உரித்தான அந்தஸ்து கிடைப்பதில்லை என்பதான ஒரு குற்றச்சாட்டு கலைஞர்களால் முன்வைக்கப்பட்டிருக்கிறது உண்மை தான்.
எம்மவர்கள் இந்த மண்ணில் இருந்தபோது கலைகளையும், கலைஞர்களையும் வளர்க்க விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக்கழகம் என்ற பிரிவு உருவாக்கப்பட்டு அதனூடாக பாரம்பரிய கலைகளையும், பண்பாட்டையும் வளர்த்திருந்தார்கள்.
தமிழர்களின் கலை வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலமே பொற்காலம் ஆகும்.
கலைஞர்களும் தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆற்றிய பங்கு மகத்தானது. தங்களின் கலைப்படைப்புக்களால் போராட்டத்தின் பக்கம் மக்களை எழுச்சி கொள்ள வைத்தவர்கள் என்றால் மிகையில்லை.
கலைஞர்களும் இந்த மண்ணில் மீளும் சிறப்பாக உரிய அந்தஸ்தத்தோடு வாழும் காலம் உருவாக்ப்படும் என தெரிவித்துள்ளார்.
குறித்த நிகழ்வு பாடகர் றெஜீஸ் தலைமையில் கரைச்சி பிரதேச சபையின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுடன் வடக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் குருகுலராஜா கரைச்சி (Kurukularaja Karaichi), பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் மற்றும் கலைஞர்கள் வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.








நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
