லங்கா பிரிமியர் லீக் கிரிக்கட் சுற்றுப்போட்டி! Colombo Stars அணி அபார வெற்றி
லங்கா பிரிமியர் லீக் கிரிக்கட் சுற்றுப்போட்டியில் Dambulla Aura அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் Colombo Stars அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.
இதன்போது துடுப்பாடிய Colombo Stars அணி சார்பில் அபார துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட சரித் அசலங்க ஆட்டமிழக்காமல் 58 ஓட்டங்களையும் தினேஷ் சந்திமால் ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்களைப் பெற்றுள்ளனர்.
பந்து வீச்சில் பிரமோத் மதுஷன் ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். முதலில் துடுப்பெடுத்தாடிய Dambulla Aura அணி 13.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 89 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டுள்ளது.

Dambulla Aura அணி சார்பில் பந்துவீச்சில் ஈடுபட்ட கசுன் ராஜித 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Colombo Stars அணி 11.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்துள்ளது.
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri